Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் சென்ற கார் கோர விபத்து… மரணம்… பெரும் பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் மத்திய அமைச்சர் சென்ற கார் விபத்துக்கு உள்ளாகியதால் அவரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கர்நாடகா அங்கோலா பகுதியில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியது. அமைச்சரின் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அமைச்சர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அமைச்சரின் உதவியாளருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விபத்து எதனால் நடந்தது என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கோர விபத்தில் அமைச்சர் மனைவி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |