அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மூன்றாவது அமைச்சராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கேபி அன்பழகனுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தற்போது மூன்றாவது அமைச்சராக செல்லூர் ராஜூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த சூழ்நிலையில் தற்போது அமைச்சர் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கக் கூடிய காரணத்தினால் அவரது ஆதரவாளர்களும், அதிமுகவை சேர்ந்தவர்களும் சற்று அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள்.