கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த 8ம் தேதி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ கொரோனா பாசிட்டிவ் ஆகி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் தொடர்ந்து அவரின் உடல்நிலை நல்ல நிலையிலேயே இருந்து வந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூக்கு லேசாக அறிகுறியுடன் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவையே இருந்தது.
அமைச்சருக்கு வேறு எந்த பிரச்சினையும் கிடையாது என்பதை மியாட் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூ இருக்கு இரண்டு முறை சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை, நல்ல உடல்நலத்துடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.