இந்த சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணனான பி.கே தேவராஜ் என்பவர் சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களாக அவர் கடும் வயிற்று வலியால் அவதிபட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு சேகர் பாபு வீட்டில் ஏற்பட்ட இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.