தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கொரடாச்சேரி ஒன்றியத்தின் சார்பாக எழுவரும் விழா புலிவலம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்தார். பின்னர் பேசிய அவர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக ஆசிரியர் மன்றம் சார்பில் 148 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் 100 க்கும் அதிகமானவை நியாயமான கோரிக்கைகள் தான்.
எனவே அவர்களுடைய கோரிக்கைகள் விரைவாக விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். அதிமுக காலத்தில் அதிகப்படியான கடன் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். ஆசிரியர்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டுசெல்லும் தபால்காரனாக நான் செயல்படுவேன் என்று பேசியுள்ளார்.