Categories
மாநில செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமார் கைது: ஈபிஎஸ் தலைமையில் போராட்டம்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

மேலும் ரூபாய் 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் சேலத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது போராட்டத்தில் பேசிய ஈபிஎஸ் ” வாக்குபதிவின்போது குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தவருக்கு பரிசாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது திமுக அரசு” என்று குற்றம் சாட்டினார்.

Categories

Tech |