Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து போராட்டம்…. இபிஎஸ் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு…. அதிர்ச்சியில் அதிமுகவினர்…..!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அதன்பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சேலத்தில் நேற்று (பிப்..28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 1,500 நபர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக விஏஓ அளித்த புகாரின்படி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |