மீன்வளத்துறையில் 25 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .
சென்னை ஆலந்தூரில் உள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை தலைமை இயக்குனரிடம் திமுக எம்எல்ஏ அப்பாவு அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்பு புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உபரி கடற்கரை கிராமத்தில் தூண்டில் வலை அமைக்கும் திட்டத்தில் 65கோடி ரூபாய் திட்டத்தில் 25கோடி பணத்தை அமைச்சர் ஜெயக்குமார் கொள்ளையடித்து விட்டதாக குற்றம் சாட்டினார். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
கடற்கரையில் இருந்து 320 மீட்டர் நீளத்திற்கு கடலுள் கல் போட வேண்டும். ஆனால் நம்முடைய மாண்புமிகு மீன் வளத்துறை அமைச்சர் கடற்கரையிலிருந்து 320 மீட்டர் நீளத்திற்கு கல் போடாமல் 270 மீட்டர் மட்டுமே கல் போட்டார்கள். 270மீட்டருக்கு மேல் உள்ள பகுதி ஆழ்கடல். அதிகமான கல் தேவைப்படும். இந்த திட்டத்தையே கேலி கூத்தாக்கி கடற்கரை பகுதி பாதிக்கின்ற வண்ணம் மிக மோசமான நிலையில் இதை செய்து விட்ட காரணத்தினால் உபரி கடற்கரை கிராமம் மிக மோசமாக அழிகின்ற நிலைக்கு சென்றுவிட்டது என குற்றம் சாட்டினார்.