இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் நாம் நாளுக்குநாள் சிலரை இழந்து கொண்டுதான் இருக்கிறோம். கொரோனாவால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து அவர் குணமடைந்த நிலையில், தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.