தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து தன்மீதும், தனது தலைமையிலான அரசு மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் வந்த விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தமிழக பாஜக தலைவர் ஏதாவது ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பெயர் கடந்த சில நாட்களாக செய்திகளில் வலம் வந்த வண்ணம் உள்ளது. அதாவது ஆவின் பால் பாக்கெட்டுகளில் முறைகேடு சர்வதேச சேஸ் உரிமையாளர் விளம்பரம் செய்வதற்கான ஆவின் கவர்களில் முறைகேடு என பல குற்றச்சாட்டுகள் அமைச்சர் நாசர் மீது கூறப்படுகின்றன. சமீபத்தில் ஆவின் அரை லிட்டர் பால் பாக்கெட்டில் 430 மில்லி லிட்டர் என்ற அளவுக்கே பால் உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதாவது, மக்களின் அத்தியாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமான பாலில் திமுக ஊழல் செய்து வருவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசின் மீது குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் முடிவதற்கு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளம்பர செய்வதற்கான ஆவின் கவர்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது ஒலிம்பியாவின் விளம்பரத்தை ஆவின் கவர்களில் அச்சிடுவதற்கு முறையாக டெண்டர் விடாமல் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு அதிக மதிப்பீட்டில் தமிழக அரசு வழங்கியுள்ளதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த விவாகரத்தை பாஜக தலைவர் அண்ணாமலை கையில் எடுத்துக்கொண்டு தினசரி நாசர் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார். மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஆவின் பால், விளம்பரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் எதிர்கட்சிகளும் இந்த விவாகரத்தை தினசரி பேசி வருவதால் திமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் உடன்பிறப்புகளுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.