Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் பதவி குறித்து…. உதயநிதி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு….!!!!

தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின், என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் என்றும் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன். எனக்கு பதவி வழங்க வேண்டும் என தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்க வேண்டாம். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என கட்சி தலைமை நன்கு அறியும். கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் தயாராகி வருகிறேன். மக்கள் பணியாற்றி கட்சிக்கும் அரசுக்கும் மகத்தான புகழ் சேர்த்திடுவோம் என தெரிவித்துள்ளார்

Categories

Tech |