பாலியல் புகாரை தொடர்ந்து ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
பெண் ஒருவருடன் டி.எஸ்.பி பரவாசுதேவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அவர் மீதான உண்மை தன்மைகள் ஆராயப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிஎஸ்பிஐ பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் கே.என் நேருவால் புகழ்ந்து பேசப்பட்டவர். குறிப்பாக வாசுதேவன் மிகவும் திறமையானவர் என்று கே என் நேரு புகழ்ந்திருந்தார்.அதாவது, குற்றவாளியை நிரபராதியாகவும், நிரபராதியை குற்றவாளியாகவும் மாற்றக்கூடிய திறமையை கொண்டவர் இந்த வாசுதேவன் என டிஎஸ்பிஐ சுட்டிக்காட்டி நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் அமர்ந்து கேஎன் நேரு அவர்கள் சுட்டிக்காட்டி பேசி இருந்தார்.
அந்த டிஎஸ்பி தற்போது பாலியல் புகாரில் சிக்கி இருக்க கூடிய நிலையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அவர் திருச்சி மாவட்ட டி.எஸ்.பியாக பணியாற்றி வந்தார். திருச்சி சரக காவலர்களுக்கு என தனி வாட்சப் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வாட்சப் குழுவில் காவல்துறை தொடர்பான தகவல் மட்டும் பரப்பப்பட்டு வரும் நிலையில், அந்த குழுவில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருடன் ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவன் நிர்வாணமாக இருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட காவலர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு தங்களுடைய மேல் அதிகாரிகளுக்கு இந்த படத்தை அனுப்பி சம்பந்தப்பட்ட தகவல்களையும் விஷயங்களையும் புகாராக தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அந்த குழுவில் இணைந்திருக்கும் பெண் காவலர்கள் பலரும் டிஜிபிக்கும் புகாரை அளித்துள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உண்மை தன்மை கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் டிஎஸ்பி பரவாசுதேவன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட பெண் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயசீலன் ஜீயபுரம் டிஎஸ்பியாக கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.