Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் பெரிய கருப்பன் மீதான வழக்கு… அதிரடியாக ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு…!!!!!

அமைச்சர் மீது காவல்துறையினர் பதிவு செய்த  வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பெரியகருப்பன் உள்ளார். இவர் மீது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தேர்தல் விதிகளை மீறி வாகனங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட 3  வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில்  இந்த வழக்கு  நீதிமன்ற நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  அதிமுக ஆட்சியின் போது தன் மீது உள்நோக்கத்தோடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில்   மனு அளித்தனர். இதனை விசாரித்த நீதிபதி 3  வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |