போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துறையை கவனித்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அவரை இடமாற்றம் செய்வதாக மிரட்டியதாகவும் எழுந்த புகாரின் பின்னணியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்துத் துறைக்கு வெளியில் இருந்து தீபாவளி ஸ்வீட்ஸ் வாங்கியதாக ராஜகண்ணப்பன் மீது விமர்சனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.