Categories
மாநில செய்திகள்

அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு….. என்ன காரணம் தெரியுமா?….!!!

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியலின பிடிஓவை அவமதித்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின பிடிஒவை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை பரிசளித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டு உள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |