Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம்”…. ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கம்…..!!!!

முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கமளித்து இருக்கிறது. அதாவது, அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை. வரி பாக்கியில் 20 % மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் விஜயபாஸ்கர் செலுத்தவில்லை என வருமான வரித்துறை புகாரளித்துள்ளது.

வரி வசூலிக்க எத்தடையும் இல்லை. விஜய பாஸ்கருக்கு விளக்கமளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு தான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனை வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு, விஜய பாஸ்கர் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் தள்ளி வைத்தார்.

 

 

Categories

Tech |