Categories
மதுரை மாநில செய்திகள்

அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றன. வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள,  நிலையில் அதனை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விதமான அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. பெரும் பொருளாதார இழப்பை சந்தித்வர்களுக்கு தமிழக தமிழக அரசின் அறிவிப்புகள் சற்று ஆறுதலை கொடுத்து வந்தன.

அந்த வகையில் தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பிரதமரின் கடனுதவி திட்டத்தின் கீழ் ரூபாய் 10,000 வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கூடுதல் விவரங்களுக்கு விற்பனை குழு உறுப்பினர்களிடம் 98 94 05 86 17, 97 91 65 53 36 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |