Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக…. அவதூறு பரப்ப கூடாது – உயர்நீதிமன்றம்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை தீவிரமாக செய்து வருகின்றன. அதேபோல இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம், திமுக வின் ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை தேர்தல் சூழலில் விசாரிப்பது சரியாக இருக்காது எனக் கூறி விசாரணையை ஜூன் மாதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் வழக்கை காரணம் காட்டி அரசியல் கட்சிகள் குற்றம் சாட்ட அவதூறு பரப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தியது.

Categories

Tech |