Categories
உலக செய்திகள்

“அமைதியை ஏற்படுத்த செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்”… சீன ராணுவ மந்திரி கருத்து…..!!!!!!!!!

இந்தியா-சீனா இடையேயான நீண்டகாலமாக எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகின்றது. கடந்த 2020 ஆம் வருடம் மே மாதம் 5-ஆம் தேதி முதல் கிழக்கில் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருதரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் சீனா தொடர்ந்து சாலைகள் அமைப்பது, பாலம் கட்டுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 15ஆம் தேதி லடாக் எல்லையில் கல்வான்  பள்ளத்தாக்கு பகுதியில் சீன படையினர் கொடூரமான ஆயுதங்களுடன் வந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இதில் சீன தரப்பிலும் பெருத்த உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இரு தரப்பிலும் தளபதிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளது. அதன் பலனாக பாங்காங் ஏரி மற்றும் பகுதியில் இரு தரப்புப் படைகளும் விலகிக் கொண்டது. இந்த நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடித்தாலும் கூட இருதரப்பும் அங்கு தலா  60 ஆயிரம் வீரர்களையும், தளவாடங்களையும் குவித்து வைத்து இருப்பதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.மேலும்  சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற ஷாங்காரி லா பேச்சுவார்த்தை உச்சி மாநாட்டில் சீன ராணுவ மந்திரி கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவரிடம் இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை பற்றி அமெரிக்க சிந்தனையாளர் பேரவையான புரூக்கிங்ஸ் அமைப்பின் இயக்குனர் டாக்டர் தான்வி மதன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்து சீன ராணுவ மந்திரி வெய் பெங்கே பேசியபோது, சீனாவும் இந்தியாவும் அண்டை நாடுகள் இருதரப்பிலும் நல்லுறவை பராமரித்து வந்தால்  அது இரண்டு நாடுகளின் நலன்களையும் பூர்த்திசெய்யும். மேலும் அதற்கு தான் நாங்கள் இப்போது செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். நாங்கள் இந்தியாவுடன் தளபதிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றோம். எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |