அமைதி என்பது தமக்கு பிடிக்காத வார்த்தை என எலான் மஸ்க் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அமைதி குறித்த தனது கருத்தை இன்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் “அமைதி அந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன். அமைதியை பற்றி அக்கறை கொண்டவர்கள் நான் பேசுவதை கேட்க தேவை இல்லை. அமைதியை பற்றி கவலைப்படாதவர்கள் என்றால் பரவாயில்லை” என குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பெர்கெய்னில் உள்ள சுவரில் அமைதி என்று எழுதப்பட்டிருந்தால் தாம் அங்கு நுழைய மறுத்து விட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
மேலும் ரஷ்யா, உக்ரேன் போரிலும் தீவிரமாக தனது கருத்துக்களை புதினுக்கு எதிராக தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஒற்றை போருக்கான சவால் விடுகிறேன் என பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைன் நாட்டின் தொலை தொடர்பு இணைப்பு முழுவதும் சீர்குலைந்ததையடுத்து டெஸ்லாவின் இணைய முனையங்கள் போர் பாதித்த பகுதிக்கு அனுப்பப்பட்டு இணையத்தள வசதிகளை வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.