Categories
உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தால்…. விமான சேவை தொடக்கம்…. இஸ்ரேல்- அரபு நாடுகளின் முடிவு….!!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிற்கு, பக்ரைன் தலைநகர் மனாமாவில் இருந்து விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே அமைதியை  உருவாக்க கடந்த ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் முயற்சிகளை மேற்கொண்டார். இதனால் இஸ்ரேல் ஆனது ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், சூடான், மொரோகோ போன்ற நாடுகளுடன் அமைதி ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளது.

இதன் விளைவாக, இஸ்ரேல் தூதரகமானது பக்ரைன் நாட்டில் தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது. மேலும்  இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி யர் லபிட்,  இந்த வளைகுடா நாடுகளுடன் ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு நேற்று முதல்முறையாக அரசுப் பயணமாக பக்ரைன் சென்றுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் தூதரகமானது, பக்ரைன் தலைநகர் மனாமாவில் இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதியான உறவை உருவாக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தூதரகத்தை இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் பக்ரைனில் திறந்து வைத்துள்ளார். மேலும் பக்ரைன்-இஸ்ரேல் இடையேயான விமான போக்குவரத்தானது, இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பக்ரைன் தலைநகர் மனாமாவில் இருந்து விமானமானது அனுப்பப்பட்டது.  மேலும் மத்திய கிழக்கு பகுதியில் இருக்கும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தினால் தற்பொழுது அங்கு  அமைதியான சூழல் நிலவி வருகிறது.

Categories

Tech |