Categories
உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தைக்கு…. “முடியாது என்று ஒரு போதும் கூறாதீர்கள்”…. பிரபல நாட்டு வெளியுறவுத்துறை ஆலோசகர் அறிவிப்பு….!!!!

அமைதி பேச்சுவார்த்தைக்கு முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 231 நாட்களாக நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில்  கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “அப்போது அவரிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புதினுடன் அமைதி பேச்சுவார்த்தை குறித்து பேசப்போவதில்லை என தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்விக்கு பதிலளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர், முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள் என ஜெலன்ஸ்கியிடம் நான் கூற விரும்புகின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |