Categories
உலக செய்திகள்

“அமைதி பேச்சுவார்த்தை”… இனிமேல் போரை நிறுத்த மாட்டோம்…. ரஷ்யா அறிவிப்பு……!!!!!

அமைதி பேச்சுவார்த்தைக்காக இனிமேல் உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை ரஷ்யா நிறுத்தாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov தெரிவித்து உள்ளார்.

உக்ரைன் மீது தொடர்ந்து 47-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் கீவ் நகருக்கு சென்று ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்து உதவி தொகுப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊடகத்துக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov பேட்டியளித்தபோது “உக்ரைனுடன் பேச்சுவார்த்தையை தொடராததற்கு எந்த காரணமும் இல்லை.

எனினும் இருதரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது ரஷ்யா தனது ராணுவம் நடவடிக்கையை நிறுத்தாது என திட்டவட்டமாக தெரிவித்தார். முன்னதாக பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா-உக்ரைன் இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி புடின் ராணுவ நடவடிக்கையை இடைநிறுத்த உத்தரவு பிறப்பித்தார். ஆனால் ரஷ்யாவின் நிலைப்பாடு இப்போது மாறிவிட்டது. உக்ரைனியர்கள் தாக்குதலை இடைநிறுத்த திட்டமிடவில்லை என நாங்கள் உறுதியாக நம்பிய பின், இறுதி உடன்பாடு எட்டப்படாத வரை அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளின் போது ராணுவ நடவடிக்கையில் இடைநிறுத்தம் இருக்காது என்று முடிவு செய்யப்பட்டது என அவர்  கூறினார்.

Categories

Tech |