மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு உரிய லாபம் பெற்றுத்தர வேண்டிமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் இருக்கும் கல்படை, பொட்டியம், மயிலம்பாடி, மட்டியப்பாறை, மாவடிப்பட்டு, கரியலூர் உள்ளிட்ட 150 கிராமங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த கிராமங்களில் மரவள்ளி கிழங்குகள் அமோகமாக விளைந்துள்ளது. இருப்பினும் 1 டன் மரவள்ளிக்கிழங்கு ரூபாய் 2,500 முதல் 3,500 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் போட்ட முதலை கூட எடுக்க முடியாமல் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்த மரவள்ளிக்கிழங்குகள் ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் கல்வயரான்மலை பகுதியில் வருடத்திற்கு 3 லட்சம் டன் அளவுக்கு மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்படுகிறது. இங்கு ஜவ்வரிசி ஆலை அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எனவே அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.