பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா போட்ட ட்விட்டர் பதிவிற்கு பிரபல இயக்குனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் நவீன் முகமதலி மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார். இவர் தற்போது அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். சினிமா, அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் பற்றி ட்விட்டரில் பதிவு போடுவார். இந்த நிலையில் இளையராஜா பிரதமர் மோடி பற்றி எழுதிய முன்னுரைக்கு இவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். Blue Kraft Digital Foundation என்ற அமைப்பானது அம்பேத்கரும் மோடியும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. இதுக்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி உள்ள நிலையில் பிரதமர் மோடியும் அம்பேத்கரையும் ஒப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியைப் பார்த்து பெருமை பட்டிருப்பார் என புகழ்ந்து எழுதியுள்ளார்.
இளையராஜா தமிழர்களை தாலாட்டிய தாய். தவறிழைத்தவர் தாயாயினும் சுட்டிக்காட்டும் பிள்ளைகளே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும். அவர் கருத்தை வெறுக்கிறோம், அவரை அல்ல.
ராஜாசார் இசை எங்கள் மூச்சு. அய்யா அம்பேத்கர் எங்கள் தன்மானம். சுவாசிப்பதற்காக தன்மானத்தை என்றும் இழக்கமாட்டோம்#JaiBhim pic.twitter.com/K4gn5aDTzI— Naveen Hidhayath (@NaveenFilmmaker) April 16, 2022
இளையராஜா இப்படி எழுதியதற்கு பலர் ஆதரவும் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்ற நிலையில் இயக்குனர் நவீன் முகமது அலி தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றார். இதுபற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, இளையராஜா தமிழர்களை தாலாட்டிய தாய். தவறு என்றால் தாய் ஆயினும் சுட்டிக்காட்டும் பிள்ளைகளே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும். அவர் கருத்தை எதிர்கின்றோம். அவரை கிடையாது. ராஜா சார் எங்கள் மூச்சு. ஐயா அம்பேத்கர் எங்கள் தன்மானம். சுவாசிப்பதற்காக தன்மானத்தை என்றும் இழக்க மாட்டோம் என்று பதிவிட்டிருந்தார். நவீன் முகம்மது அலி போட்ட டுவிட்டர் பதிவிற்கு ஆதரவும் எதிர்ப்பு வந்திருக்கின்றது. அதற்கு ரசிகர் ஒருவர் இளையராஜா சொன்னது தான் சரி. முத்தலாக் முறையை ஒழிக்க சட்டம் கொண்டு வந்து பல லட்சம் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்படுத்திய மோடி கூட ஒரே அம்பேத்கர்தான் என குறிப்பிட்டிருக்கின்றார்.