அம்பேத்கரும் மோடியும் நேரெதிர் துருவங்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் தெரிவித்ததாவது: “அண்ணாமலைக்கு அரசியலுக்கு வந்த சில ஆண்டுகள் ஆகின்றது. தற்போது அம்பேத்கர் என்ன செய்தார்? பிரதமர் மோடி என்ன செய்தார்? என்ற விவாதம் வைத்துக்கொள்ள சவால் விட்டிருப்பது கவனயீர்ப்புகாக மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பார்க்கமுடியாது.
இருவரும் நேர் எதிர் துருவங்கள். இருவரும் ஒரே சிந்தனையாளர்கள் என பாஜக கற்பிக்க முயல்வது ஏற்புடையது அல்ல. அதனால்தான் இசைஞானி இளையராஜா அவர்கள் விமர்சிக்கப்படுகிறார். அதிமுக தனித்து இயங்கவில்லை. மக்களுக்கு சேவை செய்யாமல் பாஜகவுக்கு சேவை செய்கின்றனர். அதிமுக தன்னிச்சையாக தனித்து செயல்படுமானால் பாஜக தமிழ்நாட்டில் ஒரு பொருட்டே இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.