அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பேசிய எச் ராஜா, அம்பேத்கரே காவி அடைந்து தான் இருந்தார். அந்தப் படமே எங்களிடம் இருக்கிறது. இப்ப கூட எங்களால் காட்ட முடியும். அதை போஸ்டரில் போட்டால் உடனே காவல்துறை விசிக கைக்கூலியாக செயல்படுமா என்ன? அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார். புத்த பிக்குகள் என்ன உடை அணிகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
Categories