நாடு முழுவதும் இன்று அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தகடி கிராம பஞ்சாயத்து தலைவரான டி.ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அம்பேத்கரின் நினைவு தினத்தை ‘மதகடி தலைஞாயிறு பஸ் ஸ்டாப்பில்’ அனுசரித்தவர்கள், பிற சமூகத்தை பற்றி இழிவுபடுத்தி பேசியதாக இரு சமூகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. ஆகவே மீண்டும் அதேபோன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று ராஜேந்திரன் தமது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து இந்த மனுவை, நீதிபதிகள் துரைசாமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறை தரப்பில், மனுதாரர் குறிப்பிட்ட பகுதியில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.