Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அம்மனுக்கு சிறப்பு பூஜை … பொங்கலிட்டு வழிபட்ட பெண்கள் ..!!

தை முதல் செவ்வாயில் நகரத்தார் சமூகத்தை சேர்ந்த பெண்கள் செவ்வாய் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன்கோட்டையில் பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும்  முதல் செவ்வாயில் நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அம்மனுக்கு  செவ்வாய் பொங்கல் வைக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த  நடைபெற்ற  திருவிழாவில் 901 நகரத்தார் சமூகத்தை சேர்ந்த பெண்கள்  கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டனர் . அதன்பிறகு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை  தரிசனம் செய்தனர்.

Categories

Tech |