Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அம்மனுக்கு சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம் ….!!

தை வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில்  அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில்  மாரியம்மனுக்கு பால், பலம், திருநீர், பன்னீர், தேன், தயிர், உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அம்மனை தரிசனம் செய்ய சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

Categories

Tech |