Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி கவலை இல்ல…. கதவில் துவாரம் அமைப்பு… மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபட கதவில் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவிலில் பக்தர்கள் வழிபடுவதற்காக கோவிலின் முன்பக்க கதவின் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிலின் பாதுகாப்பு கருதி துவாரத்தில் இரும்பு கம்பிகள் கொண்டு ஜன்னல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா செய்துள்ளார். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் துவாரம் வழியே அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.

Categories

Tech |