Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அம்மன் கோவில் ஊர்வலம்…. இடிந்து விழுந்த தூண்…. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…!!

அம்மன் கோவில்  ஊர்வலத்தின் போது வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே உள்ள கத்தியவாடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தணிக்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு திருவிழா நடந்து வருவதால் வீதிளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கீழ்குப்பம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் இடிபாடடைந்த சுற்று சுவர் வழியாக சென்றுள்ளது. அப்போது அங்கிருந்த ஒரு தூண் திடீரென இடிந்து விழுந்ததில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காளிதாஸ் என்பவர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆற்காடு டவுன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |