அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காங்கேயநல்லூர் மேலாண்ட பகுதியில் திருப்பாக்கம் படவேட்டம்மன் கோவில் இருக்கின்றது. இங்கே புடைப்புச் சிற்பம் வடிவிலான சிலைக்கு வழிபாடு பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் அம்மன் சிலையை சேதப்படுத்தி இருக்கின்றார்கள்.
இதை அடுத்து நேற்று காலையில் அப்பகுதி மக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் மர்ம நபர்கள் மது குடிக்கின்றார்கள். ஆகையால் போதையில் அதை சேதப்படுத்தி இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.