Categories
பல்சுவை

அம்மாக்களே உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?…. அப்போ இனி இந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கோங்க….!!!!

வீட்டில் உள்ள பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்றவர்களை கவனித்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், தாதுக்கள், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஜின்க் போலேட் போன்ற அனைத்து வகை ஊட்டச்சத்துக்களும் நிறைந்த இருக்கும்படியான உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி இலை வடிவ காய்கறிகளில் அதிக அளவு நார்ச் சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

அவை உடலில் செரிமான ஆற்றலை மேம்படுத்தி மலச்சிக்கலை தீர்க்கும். வாரத்தில் நான்கு நாட்கள் கீரைகள் மற்றும் இறை வடிவ காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதனைப்போலவே குயினோவா தானியங்களின் தாய் என்று கூறப்படுகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதய நோய்கள், குறைந்த ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற அபாயங்களை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதனை பெண்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தேங்காய் எண்ணெய் அஜீரணக் கோளாறுகளை நீக்கி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க உதவுகின்றது.

அது மட்டுமல்லாமல் உடலில் ஆற்றலின் அளவை அதிகரிக்கிறது. உடலின் செரிமான ஆற்றலை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.அது மட்டுமல்லாமல் உடல் கொழுப்பின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. அடுத்து முழு தானியங்களில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதில் நார்ச்சத்துக்களும் உள்ளன. பழுப்பு அரிசி, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்ற முழு தானியங்களில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. அவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

உடலில் கலோரிகள் சேராமல் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். பால் சார்ந்த பொருட்கள் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் என்பதால் அதனை பெரும்பாலானோர் தவிர்த்து விடுகின்றனர். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பெண்களுக்கு தேவையான புரதங்கள் மற்றும் கால்சியத்தின் தேவையை பூர்த்தி செய்யும். பால் மற்றும் முட்டை போன்றவற்றையும் சிக்கன் போன்றவற்றையும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடலுக்குப் போதுமான அளவு புரதத்தை பெறுவதற்கு சைவ உணவு சாப்பிடுபவர்கள் பருப்பு வகைகள், விதைகள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. அனைத்திற்கும் மேலாக கிரீன் டீ உடல் எடை இழப்பை ஊக்குவிக்க உதவுகின்றது. இயற்கையாக உடலின் கொழுப்பை கரைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. அதனால் பெண்கள் குறிப்பாக 35 வயதை கடந்த அம்மாக்கள் வழக்கமான காபிக்கு பதிலாக கிரீன் டீயை எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

Categories

Tech |