Categories
பல்சுவை

அம்மாக்களே….! கோடை வெயிலில் குளு குளு ராகி மில்க் ஷேக்….. உங்க குழந்தைகளுக்கு கட்டாயம் செஞ்சு குடுங்க….!!!!

கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலில் நமது உடம்பை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதேபோன்று குழந்தைகளுக்கு குளிர்ச்சியாக ராகி மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதை எப்படி தயாரிப்பது மற்றும் அதன் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

பிறந்த ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு எதையும் கொடுக்கக்கூடாது. அதன் பிறகு அவர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு உணவையும் சரியான நேரத்தில் சரியான மாதத்தில் கொடுக்க வேண்டும். கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு உடல் உஷ்ணத்தை தவிர்க்கும் வகையில் கேழ்வரகு செய்து கொடுக்கலாம். கேழ்வரகை அப்படியே கொடுத்தால் சாப்பிடுவதற்கு சிரமமாக இருக்கும். அதற்கு நீங்கள் ராகியை முளைகட்டி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ராகி மில்க் ஷேக் எப்படி செய்வது:

ராகியை முளைகட்டி பொடியாக்கிக் கொள்ளவும். இதை தேவைப்படும்போது நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முளைகட்டிய கேழ்வரகு பொடி – 4 ஸ்பூன்

தண்ணீர் – அரை கப்

வெல்லம் – தேவைக்கேற்ப

கொக்கோ பவுடர் – ஒரு டீஸ்பூன்

டிரைஃப்ரூட்ஸ் பவுடர் – 2 டீஸ்பூன்

பால் – ஒரு கப்

முளைகட்டிய கேழ்வரகு பொடியை தண்ணீரில் கொட்டி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சில நிமிடத்தில் கேழ்வரகு வெந்து விடும். பிறகு மற்றொரு அடுப்பில் வெந்நீர் வைத்து வெல்லத்தூள்  மற்றும் கொக்கோ பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும். தேவை எனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  பிறகு டிரைஃப்ரூட்ஸ் பவுடரை சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விடவும். இதை ஆற வைத்து மிக்ஸியில் இந்த கலவையுடன் சிறிது பால் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். ராகி மில்க் ஷேக் தயாராகிவிடும். இதனை ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. 6 மாத குழந்தைகளுக்கு இந்த செய்முறையில் பால் மட்டும் சேர்க்காமல் செய்து கொடுக்கலாம்.

இப்படி கொடுக்கும் போது குழந்தைகளுக்கு அதிக வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், மினரல் சத்துகள் கிடைக்கும். முளைக் கட்டாத கேழ்வரகை விட முளைகட்டிய கேழ்வரகில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. இதில் இருக்கும் புரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் சாதாரண கேழ்வரகை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும். இயற்கையாகவே கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும்.

இதில் இரும்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ரத்தசோகை பிரச்சனை வராது. வெயில் காலத்தில் கேழ்வரகு சேர்த்துக் கொள்ளும்போது உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு 6 மாதம் ஆன பிறகு இதனை சிறிது சிறிதாக கொடுத்து பழக்கலாம். ஆரம்பத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் என கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

Categories

Tech |