சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற தாய்க்கு சேரவேண்டிய பங்கினை கொடுக்காமல் மகனே சொத்து மதிப்பை மறைத்த சம்பவம் லண்டன் நீதிமன்றமத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள கோடீஸ்வரர்களுள் ஒருவரான பாரகாட் அக்ஹ்மெடோவ்-க்கு திருமணமாகி டெமூர் அக்ஹ்மெடோவ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாரகாட் அக்ஹ்மெடோவ்-க்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்கள். அங்கு அவர்களுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம் பாரகாட்-ன் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் தந்தையும், மகனும் சேர்ந்து தனக்கு எதிராக ஏதோ சதி செய்வதாகக் சந்தேகப்பட்ட பாரகாட்-ன் மனைவி மீண்டும் நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாடிய போது, தந்தை-மகன் இருவரும் சேர்ந்து செய்த சூழ்ச்சி அம்பலமானது.
அதன்படி விவகாரத்து கேட்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் தந்தையும், மகனும் சேர்ந்து சொத்து மதிப்பை மறைத்ததால் பாரகாட்-ன் மனைவிக்கு வழங்கப்பட்ட ஜீவனாம்சத்தின் தொகை குறைந்துள்ளது. மேலும் பெற்ற தாய்க்கு சேரவேண்டிய பங்கினை கொடுக்காமல் சொத்துக்கு ஆசைப்பட்டு மகன் செய்த இந்தக் காரியம் நீதிமன்றத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து லண்டன் நீதிமன்றம் டெமூர்-ன் தாய்க்கு ரூ. 750 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டது. இதனால் பிரிட்டனில் நீண்டகாலமாக தொடரப்பட்டு வந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது.