கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் ‘எக்ஸ்போ 2020’ என்ற கண்காட்சி தொடங்கியது. அதில் முதல் மூன்று மாதங்கள் மாபெரும் வெற்றியாக நிறைவடைந்தது. மேலும் இதுவரை இந்த கண்காட்சியை சுமார் 89 லட்சத்து 58 ஆயிரத்து 132 பேர் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வருகின்ற மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற இந்த கண்காட்சியை பிரபலப்படுத்தும் விதமாக விளம்பர வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் பங்கேற்று நடித்துள்ளார். மேலும் அந்த விளம்பரத்திற்கு திரைப்பட பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இசையமைத்து பாடியுள்ளார். அதேபோல் பிரசூன் ஜோஷி என்பவர் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த விளம்பரத்தில் அமிதாப்பச்சன் இந்தி மொழியில் பேசி நடித்துள்ளார். தற்போது துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் இந்த காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த வீடியோ விளம்பரத்தில் அமிதாப்பச்சன் இந்திய பார்வையாளர்களை கவரும் விதமாக “புதிய உலகை உருவாக்கும் எக்ஸ்போ 2020-ல் இணையுங்கள்” என்று கூறிய வசனமும் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த விளம்பர வீடியோ இந்தியா மற்றும் அமீரகத்தில் வெளியிடப்பட்டு இணையத்தில் பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது.