Categories
மாநில செய்திகள்

அம்மாடியோவ்! இன்று முழுவதும் இதுதான்…. தமிழகத்தை உலுக்கும் செய்தி…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி வேலுமணி பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த சி.ஆர் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்ற நிறுவனம் ஆறு ஆண்டுகளில் 11,363.15 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதேபோல ஆலயம் பவுண்டேஷன் 2,636.36%, கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனம் 967.04%, ஓசூர் பில்டர்ஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் 2,008% வளர்ச்சி அடைந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |