Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. இவ்ளோ கோடி செலவில்?…. தலைநகரை மாற்றும் பிரபல நாடு…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தோனேசியா நாடாளுமன்றம் அந்நாட்டின் தலைநகரை ‘காளிமன்டன்’ என்ற இடத்திற்கு மாற்றுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அந்த புதிய தலைநகரை கட்டமைப்பதற்கான மெகா திட்டம் 32 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ( இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ) வகுக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ வெள்ளம், காற்று மாசு, நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக தலைநகரை மாற்ற முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த புதிய தலைநகருக்கு “நுசன்டரா” என்று பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் அந்த “காளிமன்டன்” பகுதியில் தொழில்நுட்பம் சார்ந்த, குறைந்த கரியமில வாயுவை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மற்றும் ஆரோக்கியம், மருந்து உள்ளிட்டவை தொடர்பான தொழிற்சாலைகள் அமைக்க முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |