Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. உலகில் வாழும் உயிரினங்கள் எத்தனை தெரியுமா?…. மிரண்டு போன விஞ்ஞானிகள்…. ஷாக் நியூஸ்….!!!!

பூமியில் மொத்தம் எத்தனை உயிரினங்கள் வாழுகின்றது ? என்பதை கண்டறிவது உயிரியல் வல்லுநர்களுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்றில் உலகில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் 99.99% உயிரினங்களை பற்றி நமக்கு தெரியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழக உயிரியல் வல்லுநர்கள் உலகெங்கும் உள்ள கல்வி அமைப்புகள் மற்றும் அரசாங்கங்கள் சேமித்த புள்ளிவிவர களஞ்சியங்களை தொகுத்து ஒரு முடிவுக்கு வர அண்மையில் முயற்சி செய்துள்ளனர். அதில் விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் ஆகியவை குறித்த தகவல்களும் அடங்கும்.

இந்த தகவல் தொகுப்பில் உலகமெங்கும் உள்ள சுமார் 35,000 இடங்களில் இருந்து 56 லட்சம் நுண்ணுயிரிகள் அல்லாதவை மற்றும் நுண்ணுயிரிகள் குறித்த விவரங்கள் உள்ளன. இதற்கிடையே இந்த ஆய்வில் பங்கேற்ற துணை பேராசிரியர் ஜே.டி.லென்னான், “இதுவரை இல்லாத அளவுக்கு எங்கள் ஆய்வு மிகப்பெரிய புள்ளிவிவர தொகுப்பினை கணக்கில் எடுத்துள்ளது.

பல்லுயிர் தன்மை மற்றும் புதிய சூழலியல் மாதிரிகள் குறித்த புதிய விதிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த மதிப்பீட்டை மிகத் தெளிவாக எடுத்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த கணக்கெடுப்பில் இன்னும் ஒரு லட்சம் மடங்கு நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த ஆய்வுக்குழுவினர் உலகில் தற்போது ஒரு லட்சம் கோடி ( ஒரு ட்ரில்லியன் ) உயிரினங்கள் வாழலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |