1980-களில் இருந்து முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கஸ்தூரி விஜயகாந்த், பிரபு, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடிகை கஸ்தூரி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் சினிமாவில் தற்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிப்பவர்களை விளாசுவதோடு சாதனை படிப்பவர்களை பாராட்டியும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி கர்ப்பிணி பெண் போல் வயிற்றை நிமிர்த்தி இருக்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த போட்டோவுக்கு கேப்ஷனில் “மீண்டும் கர்ப்பம்” என பதிவு செய்துள்ளார். அதனை பார்க்கும் ரசிகர்கள் மூன்று மாதத்தில் இரண்டு முறை கர்ப்பமா ? என்று கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதேசமயம் பலர் கஸ்தூரிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் சிலர் எத்தனை மாசம் மேடம் ? என்று அக்கறையுடன் கேட்டு வருகின்றனர்.