சொத்துப் பிரச்சினை காரணமாக வாலிபரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்
ஓசூர் அருகே எழுவபள்ளி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் வயது (25). பெயிண்டர் தொழில் செய்து வந்த இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், 3 வயது பெண் குழந்தையும், நான்கு மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது.
அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் பிரசவத்திற்க்காக கர்நாடகாவில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று இரவு பிரதீப்பை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். மேலும் அவர்கள் தலையை எழுவபள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு வைத்துள்ளனர். அதில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் காட்டுப்பகுதிக்குள் கால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து பாகலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு வந்து தலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல் கட்ட விசாரணையில் சொத்துப் பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.