தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சோனியா அகர்வால் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிப்படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபு தேவாவின் வார்டு 126, காதலை தேடி நித்யா நந்தா, பஹீரா உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வால் நடித்து வருகிறார்.
அதேபோல் சோனியா அகர்வால் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது சமூகவலைத்தள பக்கத்தில் தனது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் பச்சை நிற புடவையில் சோனியா அகர்வால் தற்போது போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சோனியா அகர்வாலை ஹோம்ளி லுக்கில் ‘தேவதை போல இருக்கீங்க’, செம க்யூட்டா இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.