Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. வானிலிருந்து கொட்டிய ‘மீன் மழை’…. மிரண்டு போன மக்கள்…. அமெரிக்காவில் அதிசயம்….!!!!

அமெரிக்காவில் திடீரென வானிலிருந்து ‘மீன் மழை’ பொழிந்துள்ளது.

கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள டெக்ஸார்கானா என்ற பகுதியில் அதிசயமாக ‘மீன் மழை’ பெய்துள்ளது. அதாவது வானிலிருந்து மழையுடன் மீன்களும் வந்து பூமியில் விழுந்துள்ளது. அதனை கண்ட பொதுமக்கள் வானிலிருந்து மீன் மழை பொழிகிறதா ? என்று வியப்புடன் பார்த்தனர். இதற்கிடையே அந்த நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மீன் மழை குறித்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதனை பார்த்த இணையவாசிகள் அந்த நகரில் பூனைகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான் என்று கலாய்த்து பதிவு செய்துள்ளனர்.

மேலும் மற்றொரு நபர் இருபது வருடங்களுக்கு முன்பு மீன் மழை பெய்ததாக நான் கூறியபோது அனைவரும் என்னை பைத்தியம் போல் பார்த்தனர். ஆனால் அவர்களை இன்று நான் ஏளனமாக பார்க்கிறேன் என்று கமெண்ட் செய்துள்ளார். அதேபோல் இறந்து போன மீன்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் இருந்தால் சுகாதாரக் கேடு ஏற்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |