விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது வரை ஜிபி முத்து, நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு மற்றும் ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களுள் ஜி பி முத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜிபி முத்துவின் வருமானம் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி யூட்யூபில் மட்டும் இவர் மாதம் 3 லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையும், கடை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையும்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக மூன்று லட்சம் வரையும் அவர் பெற்றதாக அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.