Categories
பல்சுவை

அம்மாடியோ இத்தனை கோடியா?…. கடந்த அக்டோபரில் களைகட்டிய ஆன்லைன் விற்பனை…. கேட்டா தலையே சுத்துது….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு பொருளையும் வாங்குகின்றனர். குறிப்பாக amazon மற்றும் flipkart உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அதிக அளவு பொருட்களை வாங்குகிறார்கள். அதிலும் பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம். கூட்ட நெரிசலில் சிக்கி அலை மோதுவதை விட வீட்டில் இருந்தே எளிதில் பொருட்களை வாங்குகிறார்கள்.

இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் 76 ஆயிரம் கோடிக்கு மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக ரெட்சீர் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. 83 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடைபெறும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில் அதை விட குறைவாகவே விற்பனை ஆகியுள்ளது. மேலும் ஆன்லைனில் கிட்டத்தட்ட 11.2 – 12.5 கோடி பேர் பொருட்களை வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |