இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி ) பங்குகள் பங்கு சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் வர்த்தகத்துக்கு வந்தது முதல், முதலீட்டார்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்து கொண்டு இருக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் தினம்தோறும் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ஐ ஆர் சி டி சி நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் 198 சதவீதம் அதிகரித்து ரூ.245 கோடியாக உயர்ந்துள்ளது. இது தவிர ஐ ஆர் சி டி சி யின் வருவாய் ரூ.852.59 கோடியாக அபார வளர்ச்சி பெற்றுள்ளது. இதில் கேட்டரிங் சேவையில் மட்டும் 352 கோடி வருவாயை ஐ ஆர் சி டி சி ஈட்டி உள்ளது.மேலும் பங்கு சந்தைகளில் ஐ ஆர் சி டி சி யின் மதிப்பு 2.41 சதவீதம் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.