Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. இந்தியாவில் இவ்வளவு இருக்கா?…. அடாவடி ஆன்லைன் கடன் ஆப்கள்…. ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் ஆன்லைன் கடன் ஆப்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் ஏராளமான ஆப்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றது. அதனால் பாதிக்கப்படுவோர், ஏமாந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என பலரும் உண்டு. இந்த நிலையில் இந்தியாவில் சுமார் 600 சட்டவிரோத கடன் ஆப்கள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆப்கள் அனைத்தும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு பல்வேறு ஸ்டோர்களில் கிடைப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு மக்களை எச்சரித்துள்ளது.

தற்போதைய சூழலில் இந்தியாவில் மொத்தமாக சுமார் 1100 ஆன்லைன் கடன் ஆப்கள் செயல்பட்டு வருவதாகவும், இவை அனைத்தும் 80க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் கிடைப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இவற்றை லோன், இன்ஸ்டன்ட் லோன், குயிக் லோன் போன்ற வார்த்தைகளைக் கொண்டு தேட முடிகிறது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆன்லைன் கடன் ஆப்கள் குறித்து புகார்கள் அதிகரித்து கொண்டே வருகின்ற நிலையில், புகார்களை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கவும் தனி இணையதளத்தை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.

மேலும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் கடன் ஆப்கள் குறித்து 2562 புகார்கள் பதிவாகி உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதுபோன்ற கடன் ஆப்களை பயன்படுத்தி ஏமாறாமல் இருப்பது நல்லது என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

Categories

Tech |