Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ….. இந்திய குடும்பங்களின் மொத்த கடன்…. வீட்டு கடன் மட்டுமே இவ்வளவா….????

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் மொத்த கடன்களில் வீட்டு கடன்கள் பெரும் பகுதி இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. குடும்பங்களின் கிரெடிட் கார்டு கடன்கள் உயர்ந்தாலும் இன்னும் வீட்டுக் கடன்கள் பெரும் பகுதியில் இருக்கின்றன. அதன்படி இந்தியாவில் குடும்பங்களின் மொத்த வீட்டு கடன்களின் மதிப்பு 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 17.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் கிரெடிட் கார்டு கடன்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.அதன்படி கடந்த ஆண்டு கிரெடிட் கார்டு கடன்களின் மதிப்பு 1.3 லட்சம் கோடியாக இருந்த நிலையில் இந்த வருடம் 1.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை நுகர்வோர் கடல்களின் எண்ணிக்கை 16.5% உயர்ந்துள்ளது. தொழில்துறை பலன்களை பொறுத்தவரை கடன் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. நகைகள் மற்றும் ரத்தின கற்கள், தொலைத்தொடர்பு, பொறியியல் உள்ளிட்ட துறைகளின் கடன் வளர்ச்சி மந்தமாக உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Categories

Tech |