ஆஸ்திரேலியாவில் 5 வருடங்களாக 34 கிலோ ரோமத்தில் சுற்றித்திரிந்த செம்மறி ஆட்டிற்கு விடுதலை கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் பாரக் என்னும் பெயரிடப்பட்ட செம்மறி ஆடு ஒன்று உள்ளது. இந்த செம்மறி ஆடு ஐந்து வருடங்களாக முடி வெட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த செம்மறி ஆடு காட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. இதன் உடலில் உள்ள ரோமமானது 34 கிலோ எடையில் உள்ளது. இது பாரக்கிற்கு மிகவும் பாரமாக இருந்தது.
இந்த ரோமம் ஆனது பாரக்கின் உடலில் நீளமாக வளர்ந்ததால் அவற்றின் கண்களை மூடி மறைத்துவிட்டது. இதனை அறிந்த ஆஸ்திரேலிய தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் காட்டுக்குள் சுற்றித்திரிந்த பாரக்கை லான்சி ஃபீல்டில் உள்ள எத்தார்க் மிஷன் என்ற வனவிலங்கு மீட்பு அறக்கட்டளை மீட்டுச் சென்று பிறகு ஐந்து வருடங்களாக முடியை அகற்றப்படாத நிலையில்இருந்த பாரக்கின் ரோமங்களை சில நிமிடங்களிலேயே அகற்றி பாரக்கிற்கு மீண்டும் பார்வை கொடுத்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து எத்கார் ஸ்மிஷன் ,பாரம் தாங்க முடியாமல் இருக்கும் நிலையில் இருந்த பாரக் மீண்டும் உயிர் வாழ ஓர் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றுகூறி பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் பாரக்கின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.